பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தன்னுடைய காதலனை விரைவில் மணம் புரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் யுவன் படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் (33), தீரன் அதிகாரம் ஒன்றின் மூலம் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.
தொடர்ந்து என்.ஜி.கே, தேவ் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
விரைவில் இவரது நடிப்பில் அயலான், இந்தியன் 2 படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவரது காதலர் ஜாக்கி பக்னானி (39) தமிழில் த்ரிஷா நடித்த மோகினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமில்லாமல் வெல்கம் டூ நியூயார்க், கூலி நம்பர் 1, பெல் பாட்டம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
இருவரும் வருகின்ற 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனராம்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
புத்தாண்டு: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ்!
திருச்சி வரும் மோடி: ஒரே விமானத்தில் பயணிக்கும் முக்கியப் புள்ளிகள்!