இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (ஆகஸ்ட் 16 ) வளரும் இசைக் கலைஞர்களுக்காக ‘ரகிடா எண்டர்டெயின்மெண்ட்’ எனும் இசை தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தான் இசை அமைப்பாளராக அறிமுகமாகி 12 ஆவது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இத்தகைய முன்னெடுப்பை எடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் செய்தி குறிப்பில், ‘நான் 20 வயது இளைஞனாக பல லட்சியங்களைக் கொண்டு இசைத் துறையில் தனித்த ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்துடன் 2004 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். இந்தத் துறையைப் கண்டு பிடித்து, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் என் திறமையை நிரூபிக்க 10 வருடம் தேவைப்பட்டது. தொடக்க காலத்தில் நான் பட்ட அந்த கஷ்டங்களே என்னை இன்றைக்கு ஒரு இசை அமைப்பாளராக உருவாக்கியுள்ளது.
ஆக, தற்போது உள்ள திறமையான இசை அமைப்பாளர்க்களுக்கு என் போல் கஷ்டப்படாமல் உரிய வாய்ப்பு கிடைக்க ஒரு தளம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தேன். அதன் விளைவே இந்த ‘ரகிடா எண்டர்டெய்ன்மெண்ட்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இசை தயாரிப்பு நிறுவனம் சார்பாக முதல் இரண்டு படைப்புகளாக பாடகி தீ பாடிய இரண்டு பாடல்கள் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
”வயநாடு இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பில்லை” : தேர்தல் ஆணையர் விளக்கம்!
மெட்ரோவுக்கு பூஜ்ஜியம்…. ரயில்வேக்கு ஆயிரம்… மத்திய அரசை சாடிய டி.ஆர்.பாலு