ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு தென்மாவட்டங்களில் தங்கள் குழந்தைகளுக்கு அதிகளவில் வைக்ககூடிய பெயர்களான முத்து, வேல், பாண்டியன் இந்த மூன்றையும் இணைத்து முத்துவேல் பாண்டியன் என்று வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் தன்னுடைய 73 -வது பிறந்தநாளை கொண்டாடும் இன்று (டிசம்பர் 12 ) ஜெயிலர் படத்தில் அவரது முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை,
இருந்தபோதிலும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தை அறிவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அனிருத்தின் பின்னணி இசையில் ரஜினிகாந்த்தின் அறிமுகம் அவருக்கே உரிய ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளது வீடியோ முடியும்போது பட்டாக்கத்தியை கையிலெடுக்கும் ரஜினிகாந்த்தின் க்ளோசப் ஷாட்டுடன் வீடியோ நிறைவடைகிறது.
இந்த வீடியோவை வைத்து படத்தில் ரஜினிகாந்த் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்றாலும்,
கதையின் நாயகன் அல்லது அவரது தாய் தந்தையர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என்பதை” முத்துவேல்பாண்டியன்” பெயர் உணர்த்துகிறது.
ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!
இந்திய பொருளாதார வளர்ச்சி ஜோக்கா?: கடுப்பான நிர்மலா