‘குறி வச்சாச்சு’ வேட்டையன் வெளியீடு குறித்து லைகா அறிவிப்பு!

Published On:

| By Manjula

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை, லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர், லால் சலாம் படங்களுக்குப்பின் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 17௦-வது படமான வேட்டையனில் நடித்து வருகிறார்.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் இன்று (ஏப்ரல் 7) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகிறது.

அக்டோபர் 12, 13 தேதிகளில் வாரயிறுதியுடன் சேர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி வருவதால் விடுமுறை நாட்களைக் குறிவைத்து, அக்டோபர் 1௦-ம் தேதி வியாழக்கிழமை வேட்டையன் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்களில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி… ஆனால்… : நீதிமன்றம் உத்தரவு!

Rain Update: இடி, மின்னலோட… ஆறு நாளைக்கு ‘மழையும்’ உண்டு மக்களே!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel