ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களுக்குப்பிறகு ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 17௦-வது படமான வேட்டையனில் நடித்து வருகிறார்.
‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 90% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
கடைசிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சமீபத்தில் கேரளா சென்றது. இந்த படத்தை முடித்துவிட்டு தன்னுடைய 171-வது படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
இதனால் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகி வருவதால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
சமீபத்திய நிலவரத்தின்படி ‘வேட்டையன்’ படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தநிலையில் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ‘வேட்டையன்’ டீசர் வருகின்ற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.
அதோடு போனஸ் தகவலாக படத்தின் திரைக்கதை குறித்தும் ஒரு ‘க்ளூ’ வெளியாகி இருக்கிறது. அதன்படி நெல்சன்-ரஜினி கூட்டணியில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை போன்று, ‘வேட்டையன்’ படத்தின் திரைக்கதையும் இருக்குமாம்.
‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியால் அடுத்ததாக ‘ஜெயிலர் 2’ படம் நெல்சன்-ரஜினிகாந்த் காம்பினேஷனில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”என் அம்மாவை பார்த்தே 2 மாதங்கள் ஆகிவிட்டது” : அண்ணாமலை
தேர்தல் களத்துக்கு வந்த ஆர்ட்ஸ் vs எஞ்சினியரிங் சண்டை…கோவை வேட்பாளர்களுக்காக நடக்கும் மோதல்