Rajinikanth “Thalayavar 171” update

ரஜினி கைதியா? : வெளியானது ’தலைவர் 171’ மாஸ் அப்டேட்!

சினிமா

தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் என்ற புது கான்செப்ட்டை தனது படங்களில் கொண்டு வந்து பல பெரிய நட்சத்திர நடிகர்களை இணைந்து நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கார்த்தி நடித்த கைதி படத்தை கமல் ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இந்த டிரெண்டை தொடங்கி வைத்தார் லோகேஷ்.

இந்த ஐடியாவிற்கு Lokesh Cinematic Universe அதாவது LCU என்று ரசிகர்கள் பெயர் வைத்து கொண்டாட தொடங்கிவிட்டனர்.

லோகேஷ் செய்த சம்பவத்தில் மிக பெரிய சம்பவமே விஜய்யின் லியோ படத்தையும் LCU படங்களுக்குள் இணைத்தது தான். லியோ படத்திற்கு பின் இந்திய திரையுலகில் லோகேஷின் மவுஸ் கூடிவிட்டது.

LCU- வின் அடுத்த படமாக கைதி 2 வெளியாகும் என்று லோகேஷ் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் தலைவர் 171 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது அந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் LCU பட வரிசையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் இசையில் உருவான இனிமேல் என்ற பாடல் ஆல்பம் வீடியோவின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி இருக்கிறார் லோகேஷ்.

இந்நிலையில் இன்று தலைவர் 171 படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியாகி இருக்கிறது.

தலைவர் 171 படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ரஜினி கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்க, அவர் இரண்டு கைகளிலும் நிறைய வாட்ச்கள் உள்ளது.

ஒரு கைதியின் கைகளில் விலங்கு மாட்டிருப்பது போல் ரஜினியின் கைகளில் வாட்ச்கள் மாட்டப்பட்டுள்ளது. ரஜினியின் கெட்டப் செம்ம ஸ்டைலாக இருக்கிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேட்பு மனு ஏற்பு… தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய கலாநிதி வீராசாமி

தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *