ரஜினி உடல் நிலை பாதிக்கப்பட ‘கூலி’ படம் காரணமா? லோகேஷ்

Published On:

| By Kumaresan M

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, சிகிச்சை முடிவடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட முக்கிய காரணமென்று சிலர் தகவல் ஒன்றை சமூகவலைத் தளங்களில் பரப்பி வந்தனர். அதாவது, லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. 40 நாட்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. விசாகப்பட்டினம் கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து வந்தாகவும், அதனால், உப்புக்காற்று அதிகமாக சுவாசித்து ரஜினிகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறி வந்தனர்.

இதனால், கூலி படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், இந்த தகவலை மறுத்து நடிகர் லோகேஷ் கனகராஜ் , “நடிகர் ரஜினிகாந்திடம் நான் போனில் பேசினேன். அவர் நல்ல முறையில் உடல் நிலை தேறி வருகிறார். எங்கள் குழுவே மருத்துவமனையில் அவருக்காகாக இருந்தது.

கூலி படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு எந்த உடல் நிலை பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு படப்பிடிப்பை விட அவரின் உடல்நிலைதான் முக்கியமானது. அப்படி, ஏதாவது ஏற்பட்டு இருந்தால் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்திருப்போம். யூடியூப்பர்கள் தேவையில்லாமல் இது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

விமான நிகழ்ச்சி: கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்… திணறிய சென்னை

மெரினாவில் சிலிர்க்க வைத்த விமான சாகச நிகழ்ச்சி…. கண்கவர் புகைப்பட தொகுப்பு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel