விஜய்யின் லியோ – ரஜினி சொன்னது என்ன?
லியோ படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, தென்மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 16) தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “புவனா ஒரு கேள்விக் குறி படப்பிடிப்பிற்காகக் கடந்த 1977 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறேன். அதன் பிறகு படப்பிடிப்பிற்காக இப்போதுதான் வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களுடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கமுடியவில்லை என வருத்தமாக இருக்கிறது” என்றார்.
அப்போது லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ரஜினிகாந்த், “அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக ஜெயிலர் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கழுகு காக்கா கதை ஒன்றைச் சொல்லியிருந்தார். இதையடுத்து சமூக வலைதள பக்கங்களில் ரஜினியை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தும் விமர்சித்தும் பதிவு வெளியிட்டு வந்தனர். அப்போது ஐடி விங் கூட்டத்தைக் கூட்டிய விஜய் மக்கள் இயக்கம், தனி நபரை விமர்சிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் லியோ படம் வெற்றி பெற ரஜினி வாழ்த்துக் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக விஜய் ரசிகர்களும் , ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!
அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் உயர்வு!