நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170. இந்த படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திக்கா சிங், துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் இருவரும் படப்பிடிப்பில் இணைந்து நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்கானதால் வேட்டையன் படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.
வேட்டையன்
தலைவர்……. #Thalaivar #vettaiyan pic.twitter.com/QIi7n7XGNu— Desingh ✪ (@VijayDesingh) December 31, 2023
அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் சில கட்டுப்பாடுகள் போடப்பட்டது. ஆனால் தற்போது ரஜினியும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கும் காட்சியின் ஒரு சின்ன வீடியோ சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பகத் பாசில் ஓரமாக நின்று கொண்டிருக்க, ரஜினி காவல்துறை அதிகாரிகளிடம் பேசுவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது.
புகைப்படங்களை தாண்டி தற்போது வீடியோவே வெளியாகி விட்டதால் வேட்டையன் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனர்.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எண்ணூர் வாயு கசிவு போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்
சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை: அடித்தவர்கள் யார்?
பெல் நிறுவன கொள்முதல் குறைந்ததற்கு யார் காரணம் ? – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!