நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஆன படம் ஜெயிலர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்தின் தலைவர் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என்ற அறிவிப்பை வெளியிட்டது லைக்கா நிறுவனம்.
ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தலைவர் 170வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. தலைவர் 170 ஆவது படத்திற்கான அப்டேட்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களை வெளியிடப் போவதாக செப்டம்பர் 30ஆம் தேதி லைக்கா நிறுவனம் அறிவித்தது. இந்த அப்டேட் தொடர்பாக #Thalaivar170squad என்ற Hastag சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக தொடங்கியது.
இந்நிலையில் தலைவர் 170வது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது லைக்கா நிறுவனம். பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்தின் படத்திற்கு இசையமைக்க உள்ளார் ராக் ஸ்டார் அனிருத். அனிருத்தின் இசையில் தலைவர் 170 உருவாக போகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
Meet the music director of #Thalaivar170
🎹 Mr. Anirudh Ravichander#Thalaivar170Team's energy is pumped up with @anirudhofficial on board 👨🏻🎤🤟🏻 @rajinikanth @tjgnan @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran #ThalaivarFeast 🍛 pic.twitter.com/lL1Ak4aj2W— Lyca Productions (@LycaProductions) October 1, 2023
ஏற்கனவே ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் அனிருத்தின் இசைதான் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். அதேபோல் தலைவர் 170 படத்திலும் அனிருத்தின் மேஜிக் வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிய போட்டிகள் 2023: புதிய சாதனை படைத்த அதிதி அசோக்!
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதல்வர் மரியாதை!