யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? – ரஜினி விளக்கம்!

சினிமா

சன்னியாசி, யோகி ஆகியோர் நம்மை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களது காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தின் போது ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜன்சத்தாதல் லோக்தண்ட்ரிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரகுராஜ் பிராதாப் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஆகஸ்ட் 19-ஆம் தேதி யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தபோது காலில் விழுந்து  வணங்கினார். ரஜினியின் இந்த செயல் இந்தியா முழுவதும் விவாதத்திற்குள்ளானது.

இந்தநிலையில் பத்து நாட்கள் பயணத்தை முடித்து இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரஜினி சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான்கு வருடம் கழித்து இமயமலைக்கு பயணம் சென்றேன். ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய பயணத்தின்போது நட்பு ரீதியாக அரசியல் தலைவர்களை சந்தித்தேன். சன்னியாசி, யோகி ஆகியோர் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். அதனால் தான் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கிரிமினலுடன் ரஜினி

“காப்பாற்ற யாரும் வரல” : விபத்தில் பலியான சிறுமியின் தாய்!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *