உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 100 சதவிகிதம் இந்திய அணி வெல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (நவம்பர் 16) தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியை காண்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 14-ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை சென்றார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அருகில் அமர்ந்து அரையிறுதி போட்டியை ரஜினிகாந்த் கண்டுகளித்தார்.
இந்தநிலையில் இன்று மாலை சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் இந்தியா, நியூசிலாந்து போட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “முதலில் கொஞ்சம் டென்ஷனாக தான் இருந்தேன்.
நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போது தான் டென்ஷன் சற்று குறைந்தது. 100 சதவிகிதம் கப்பு நமதே. இந்திய அணி வெற்றி அடைந்ததற்கு முகமது ஷமி தான் காரணம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜஸ்தான் தேர்தல்: பாஜக முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?
பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்… சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது!