டிரைவருக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல் அமிதாப் தவித்தார் – ரஜினிகாந்த் சொன்ன தகவல்கள்!

தற்போது நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு 1,600 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகள் இருக்கின்றன.

இதே, அமிதாப்பச்சன் 1995 ஆம் ஆண்டுவாக்கில் கையில் காசு இல்லாமல் மும்பையில் ஜூகு கடற்கரையிலுள்ள தனது வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவமும் நடந்தது .

இந்த நிலையில், கடனில் இருந்து அமிதாப்பச்சன் மீண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, “ஏபிசிஎல் என்ற நிறுவனத்தை தொடங்கி அவர் சொந்தமாக படங்கள் எடுக்க தொடங்கினார். எடுத்த படங்கள் எல்லாம் வசூலை தர தவற அமிதாப்பச்சன் கடனில் தள்ளப்பட்டார். டிரைவருக்கு கூட சம்பளம் கொடுக்க அவரிடத்தில் பணம் இல்லை.

அமிதாப்பின் வீழ்ச்சியை கண்டு பாலிவுட்டில் ஒரு கூட்டம் அகமகிழ்ந்தது. ஒரு கட்டத்தில் இரவு நேரத்தில்  மங்கி குல்லா அணிந்த படி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவை சந்திக்க அமிதாப் சென்றார். அமிதாப்பச்சனை பார்த்ததும் யாஷ் சோப்ரா கையில் ஒரு செக்கை கொடுத்தார். ஆனால், அமிதாப் வாங்க மறுத்து விட்டார். படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் மட்டுமே செக்கை வாங்கிக் கொள்வேன் என்று கூறினார்.

இதையடுத்து, மொகபத்தியன் படத்தில் நடிக்க அமிதாப் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுதான் அமிதாப்பின் இரண்டாவது இன்னிங்ஸ். தினமும் 18 மணி நேரம் உழைத்தார். கிட்டத்தட்ட அனைத்து விளம்பரங்களிலும் நடித்தார். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தினார்.

3  வருடங்கள் கடினமாக உழைத்தார். அவரின் நிலையை பார்த்து பாலிவுட்டே சிரித்தது. ஆனால், தன் உழைப்பால் மீண்டெழுந்தார். தனது சொத்துக்களையெல்லாம் மீட்டார். ஜூகு கடற்கரையில் தான் விற்ற பழைய வீட்டை மீண்டும் வாங்கினார். அதே பகுதியில் மேலும் 3 வீடுகளை சொந்தமாக்கினார். இப்போது, அவருக்கு வயது 82 . ஆனாலும் ,தினமும் 10 மணி நேரம் உழைக்கிறார்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தற்போது, அமிதாப்பச்சன் நடிகர் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 “தோனி போன்றவர்கள் இருப்பது ஐ.பி.எல் தொடருக்கு நல்லது” : டாம் மூடி

கிராமி விருதுகளுக்காக போட்டிபோடும் மலையாள படங்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts