ஜெயம் ரவிக்கு போன் போட்ட ரஜினி: ஏன் தெரியுமா ?

சினிமா

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
தமிழகத்தில் இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

உலகளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது படம் குறித்தும், படத்தில் உள்ளவர்களின் நடிப்பு குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் தொலைபேசி உரையாடல் குறித்து நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசி அழைப்பு தன்னுடைய நாளையும், வருடத்தையும் சிறப்பாக்கியதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய திரைப்பயணத்திற்கு புது அர்த்தம் கிடைத்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ’பொன்னியின் செல்வன்’ படத்தைப் பற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டதுபோல் உணர்வதாக கூறியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்திருப்பதால் அடுத்த பாகம் இன்னும் பிரம்மாண்டமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்..ரகுமான், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிகை ஐஷ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மு.வ.ஜெகதீஸ் குமார்

லண்டனுக்கு இணையாக சென்னை ! அமைச்சர் எ.வ.வேலு

டி20 உலகக் கோப்பை: மெளனத்தைக் கலைத்த பும்ரா!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.