சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்கியது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்று சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இவர்களில் ஒருவர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்தப் படம் ரஜினியுடன் இல்லை என்றும், ஆனால் ஒரு ரசிகனாக ரஜினிகாந்தை இயக்கத் தான் ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதன்படி, ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
லைகா நிறுவனம் தயாப்பில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். படத்தின் கதை மற்றும் படப்பிடிப்புக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் சிபி சக்கரவர்த்தி படத்தில் இணைய இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
ரஜினியின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது: படப்பிடிப்பு தொடங்கியது!