ஜெயிலர் 2 டைட்டில் இதுதான்?… வெளியான புதிய தகவல்!

Published On:

| By Manjula

rajinikanth nelson jailer 2

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் (தலைவர் 170), இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளது.

இந்த படங்களின் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தப் படம் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லப்படுகிறது.

rajinikanth nelson jailer 2

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு “Hukum” என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் “Tiger ka Hukum” என்ற பாடல் படத்தில் இடம்பெற்று டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. Hukum என்றால் கட்டளை என்று அர்த்தம். ஜெயிலர் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், ரஜினியும் ஸ்கிரிப்ட்டிக்கு ஓகே சொல்லி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

rajinikanth nelson jailer 2

இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும், பேரனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி நெல்சன் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் மாஸ், தனது டார்க் காமெடி ஸ்டைல் என அனைத்தையும் சரியாக திரைக்கதையில் இணைத்து ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார் நெல்சன். அதேபோல ஜெயிலர் 2 படத்திலும் நெல்சனின் மேஜிக் வொர்க் அவுட் ஆகுமா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தால் இட்லி

IPL 2024 : வீறுநடை போட்ட லக்னோ… சொந்த மைதானத்தில் வீழ்த்திய டெல்லி!

அமித் ஷாவும்… அடுத்த தேர்தலும்… : அப்டேட் குமாரு

“உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்” : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel