ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதையை தற்போது நெல்சன் திலீப்குமார் எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அனிருத் இசையில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இதில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விடிவி கணேஷ், மிர்னா மேனன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் ரஜினியின் 172-வது படமாக உருவாகவிருக்கும் ‘ஜெயிலர் 2’ குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ‘ஜெயிலர் 2’ என தலைப்பு வைத்திருந்தாலும் அதன் தொடர்ச்சியாக இல்லாமல் வேறொரு கதையைத்தான் நெல்சன் எழுதி வருகிறாராம்.
ரஜினியின் கேரியரில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘பாட்ஷா’, ‘சந்திரமுகி’ படங்களின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதற்கே ரஜினி மறுத்து விட்டார். ஆனால் இரண்டாவது பாகம் என தலைப்பில் இருந்தாலும் இப்படத்தின் கதை வேறு என நெல்சன் உறுதியளிக்க, அதன்பிறகே இப்படத்தில் நடிக்க ரஜினி சம்மதித்துள்ளாராம்.
முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் இப்படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாலிவுட் நடிகை ஒருவரும் மற்றொரு நாயகியாக நடிக்கவுள்ளாராம்.
ஏற்கனவே ரஜினியுடன் ’சந்திரமுகி’, ‘அண்ணாத்த’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ராஜினாமா?
திமுக விளம்பரத்தில் சீனா கொடி: பிரதமர் மோடி காட்டம்!