தலைவர் 170 படத்திற்கு “வேட்டையன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
அக்டோபர் 4-ஆம் தேதி தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது என தலைவர் 170 பட பூஜை நிகழ்ச்சி புகைப்படங்களை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திக்கா சிங், துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினி-அமிதாப் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கான ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டிலை டீசர் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக் குழு.
தலைவர் 170 படத்திற்கு “வேட்டையன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டீசர் முழுக்க ரஜினி, ரஜினி, ரஜினி மட்டுமே. “குறி வச்சா இரை விழணும்” என்ற மாஸ் வசனமும் டீசரில் இடம்பெற்றுள்ளது.
அனிருத் இசையில் டீசரில் வரும் இங்கிலீஷ் ராப் சூப்பர். தலைவர் 170 வேட்டையன் படம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்கு : உயர் நீதிமன்றம் கேள்வி!
போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு