உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 19) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர் அங்குள்ள சாமியார்களை சந்தித்தார். பின்னர், உத்தரகாண்டில் உள்ள வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.
இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். பின்பு, இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார்.
அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளையும் ரஜினி சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாக இன்று (ஆகஸ்ட் 19) சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப் படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அலைச்சறுக்கு: இறுதிச்சுற்றில் ஸ்வீடன் வீரர்!
லீ மெரிடியன் ஓட்டல் விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!