விஜய் டிவியில் காமெடியனாக பிரபலம் ஆகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது வேகமாக வளரும் நடிகர்களில் ஒருவராக புகழ் மாறியுள்ளர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி வழியாக நடிகர் புகழ் பிரபலமடைந்தவர். இதற்கு முன் பல பேட்டிகளில் தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு என புகழ் அடிக்கடி கூறுவார். இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திக்க புகழை அழைத்துள்ளார்.
போயஸ்கார்டன் வீட்டுக்கு காலை 9 மணிக்கு வர சொன்னாராம் ரஜினி. ஆனால் காலை 7 மணிக்கு முன்பே ரஜினிகாந்தின் வீட்டுக்கு புகழ் சென்று விட்டார். பின்னர், வீட்டின் அருகிலேயே காத்திருந்தார். தொடர்ந்து, சரியாக 9 மணிக்கு ரஜினிகாந்தின் வீட்டுக்குள் சென்று அவரை சந்தித்து அளவளாவியுள்ளார் புகழ் .
அப்போது புகழுக்கு ரஜினிகாந்த் பாபா படத்தை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் புகழை கட்டியணைத்து அவருக்கு பாராட்டுக்களையும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களில் புகழின் மகளுக்கு பிறந்தநாள் வருவதால், விலையுயர்ந்த சாக்லேட்டுகளையும் ரஜினிகாந்த் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்துடன் உள்ள புகைப்படத்தை புகழ் பகிர்ந்துள்ளார். அதில், ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார்.
மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்” என புகழ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திருப்பதி லட்டுவும்… கும்பகோணத்தில் வெட்டப்பட்ட 23 ஆடுகளும்! அம்பலப்படுத்தும் அமரர் கல்கி
காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!