rajinikanth meet fans on new year

புத்தாண்டு: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ்!

சென்னை போயஸ் கார்டன் வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று புத்தாண்டு என்பதால் போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் ரசிகர்கள் திரண்டனர். கடும் பனியை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இரவு முதல் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்பு திரண்டு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

இதனையடுத்து இன்று காலை வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். ரசிகர்களை நோக்கி கையசைத்து வணக்கம் தெரிவித்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

திருச்சி வரும் மோடி: ஒரே விமானத்தில் பயணிக்கும் முக்கியப் புள்ளிகள்!

கருப்பு நிறத்தில் முதல்வர் கான்வாய்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts