ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனைதொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் தொடர்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் வெளியீட்டுக்கு பின் கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் செய்தியொன்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் படத்துக்கு அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த் என்பதுதான்.
இது சம்பந்தமாக ரஜினிகாந்த் – மணிரத்னம் உள் வட்டாரங்களில் விசாரித்தபோது தகவல் உண்மைதான் என்றார்கள்.
பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா செப்டம்பர் 7 அன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
அதில் ரஜினிகாந்த் – கமலஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் மனைவி லதாவும் வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு ரஜினிகாந்த் மனைவி லதா, மணிரத்னம் மனைவி சுகாசினியிடம், ரஜினிகாந்த் மணிரத்னம் இணைந்து ஒரு படம் செய்யவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.
சுகாசினியும் இதை மணிரத்னத்திடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் அதில் சம்மதம். உடனே, தான் யோசித்து வைத்திருந்த ஒருவரி கதை ஒன்றை ரஜினிகாந்த்திடம் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
அது ரஜினிகாந்திற்கு பிடித்து போனதால் அதனை முழுமையான திரைக்கதை ஆக்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது மணிரத்னம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளுக்கிடையே ரஜினிகாந்த்துக்கான திரைக்கதை உருவாக்கும் வேலைகளையும் தொடங்கி இருக்கிறாராம்.
பொன்னியின் செல்வன் வெற்றிபெற்றிருப்பதால், மணிரத்னம் – ரஜினிகாந்த் இணையும் படத்திற்கான வியாபாரம் அதிகமாக இருக்கும் என்கிற லதா ரஜினிகாந்த் கணக்கு அடிப்படையில், இந்தப் படத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது என்கிறது லதா ரஜினிகாந்த் உள் வட்டார தகவல்.
கொட்டும் மழையில் பேசிய ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?
இந்தியா-தென் ஆப்பிரிக்கா: டி20 தொடரில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!