rajinikanth jailer showcase is out today

”பேச்சே கிடையாது… வீச்சு தான்”: ஜெயிலர் டிரெய்லர் எப்படி இருக்கு?

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 2) வெளியாகியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதால் புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக அவரது பிறந்தநாளன்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

அதனையடுத்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் காவாலா ஜூலை 6 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து 2 பாடல்கள் வெளியானதோடு, ஜெயிலர் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. டிரெய்லரில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் ஜெயிலர் ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது.

ரஜினிகாந்த மாஸாக நடித்திருக்கிறார். குறிப்பாக ”ஒரு அளவுக்கு மேல பேச்சே கிடையாது. வீச்சு தான்” என்று டிரெய்லரில் அவர் பேசும் வசனம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஜெயிலர் டிரெய்லர் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிரெய்லர் வெளியான 1 மணி நேரத்திற்குள்ளேயே 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

மோனிஷா

கோடிக்கணக்கில் கடன்… கைவிட்டு போன கம்பெனி: பிரபல கலை இயக்குநர் தற்கொலை!

எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் : ஜெயக்குமார் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0