உதவி கேட்ட தயாரிப்பாளர்: உறுதி அளித்த ரஜினிகாந்த்

சினிமா

ரஜினிகாந்த்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர் வி.ஏ.துரை.

எஸ்.பி.முத்துராமனிடம் இருந்து வெளியில் வந்து சத்யராஜ் நாயகனாக நடித்த ‘என்னம்மா கண்ணு’ படத்தை தயாரித்தார்.

படம் ஹிட்டடித்ததால் தொடர்ந்து சத்யராஜ் நடித்த இரண்டு படங்களை தயாரித்து நஷ்டமடைந்தவர், விட்டதை பிடிக்க விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ மற்றும் விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ ஆகிய படங்களை தயாரித்தார்.

அதனால் மேலும் மேலும் கடனாளியான வி.ஏ.துரை சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஹோட்டல் தொடங்கினார். அதுவும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வி.ஏ.துரை சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.

தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டார்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ. துரையின் மருத்துவச் செலவுக்காக முதல் நபராக நடிகர் சூர்யா இரண்டு லட்சமும், நடிகர் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாயும், விநியோகஸ்தர் பைவ்ஸ்டார் செந்தில் ஒரு லட்ச ரூபாயும் வழங்கினார்கள்.

ஐந்து லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ செலவைதான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்

இதுபோன்ற நெருக்கடியில் உள்ளவர்களுக்கு நேரடியாக உச்ச நட்சத்திர நடிகர் ரஜினிகாந்த் உதவியது இல்லை என்பதுடன் அப்படி செய்தாலும் அதனை இதுவரை வெளியில் கூறியது இல்லை.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த், ‘எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தை நடித்து தயாரித்தபோது அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அவருக்கு நம்பிக்கைக்குரியவராக வி.ஏ. துரை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலவாணன்

4வது டெஸ்ட்: சாதனை சதம் கண்ட கவாஜா… தடுமாறும் இந்தியா

தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
2
+1
1