ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (டிசம்பர் 6) வெளியாகி அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது கூலி திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் ரஜினி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், இன்று காலையில் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘மாலை ஆறு மணி’ என பதிவிட்டிருந்தார்.
சொன்னது போலவே, சரியாக மாலை ஆறு மணிக்கு, பிறந்தாள் வாழ்த்துடன் கூலி திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் லோகேஷ்.

’சிகிடு வைப்’ என்ற பெயர் கொண்ட கூலி பாடலின் கிளிம்ஸ் வீடியோவில், தாளங்கள் ஒலிக்கும் டி.ராஜேந்தர் குரலில் ரஜினியின் ஸ்டைலான நடன காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 56 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், ரஜினியின் நடன அசைவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வைப் ஏற்றும்.
ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்டோர் நடித்து வரும் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு தொழிலாளார் தினமான மே 1 வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முதல் ’வைக்கம் விருது’ பெற்ற புரட்சி எழுத்தாளர்! யார் இந்த தேவநூர் மகாதேவா?
பூண்டி ஏரியில் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!