மும்பையில் இன்று (ஜூலை 12) நடைபெற்று வரும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் மும்பையில் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இவர்களது திருமணத்தில் பங்கேற்க உலகில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் செளந்தர்யா, மருமகன் விஷாகன், பேரன் வேத் கிருஷ்ணா ஆகியோருடன் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் ‘Gallan Goodiyan’ என்ற இந்தி பாடலுக்கு பிரபலங்கள் ஆடிக் கொண்டிருந்தபோது, நடிகர் ரஜினிகாந்தும் திடீரென எழுந்து நின்று ஸ்டைலாக ஆட அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அவருடன் பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ரன்வீர் சிங், மணமகன் ஆனந்த அம்பானி ஆகியோரும் ஆடிய நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதி வேகமாக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் பொது இடங்களில் ஆடி இதுவரை ரசிகர்கள் பார்த்ததில்லை. இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் அவர் ஆடியதை கண்ட ரசிகர்கள் ‘Thalaivar dance in real life – once in a lifetime’ என குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குர்தாவில் ஜான்சீனா… பட்டுவேட்டியில் ரஜினி : அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபலங்கள்!
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : சித்தராமையா