விடுதலை திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 1 திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் செய்துள்ள ட்விட்.

தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி பவானி ஸ்ரீ நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘விடுதலை-1’.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவான இப்படம் வெளியான நாள் முதல் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தில் நடித்துள்ள சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்டோரின் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் கதைக்கேற்ப இசையமைத்துள்ள இளையராஜாவையும் பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களுடன் சேர்ந்து இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ திரைப்படத்தை நேற்று இரவு இயக்குநர் வெற்றிமாறன், கதாநாயகன் சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருடன் சிறப்பு காட்சியாக கண்டு ரசித்தார்.

பின்னர் படக்குழுவினருக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கிடையே தற்போது விடுதலை படம் மற்றும் படக்குழுவினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

அதில், ”விடுதலை… இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.

சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

எடப்பாடிக்கு ’ஓகே’- பன்னீருக்கு ’நோ’: சென்னையில் மோடி

ராஜ்பவன்… ரவிபவன் அல்ல: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *