வேட்டையன் ரிலீஸ் தேதி இதுதான்.. ரஜினியே சொல்லிட்டார்!

சினிமா

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 170 வது படமான “வேட்டையன்” திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

ஜெய் பீம் படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் அவர்கள் வேட்டையன் படத்தை இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரக்சன், ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அவர்களே தெரிவித்திருக்கிறார்.

வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு வார பயணமாக இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு உள்ளார்.

கேதர்நாத், ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார்.

அதன் பிறகு ஒரு சாமிஜியை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவருடனான உரையாடலில் வேட்டையன் திரைப்படம் வரும் தசராவுக்கு வெளியாகும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து “வேட்டையன்” திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

இமயமலை பயணம் முடித்து சென்னை திரும்பியவுடன் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்ற தேர்தல்… ஜெயிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

ஹெல்த் டிப்ஸ்: உங்கள் உணவு பழக்கம் எப்படிப்பட்டது?

பியூட்டி டிப்ஸ்: முக இறுக்கத்துக்கு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணிக்கை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல் வரை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *