பாபா டிரெய்லர்: ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பாபா படத்தின் டிரெய்லர் இன்று (டிசம்பர் 3) வெளியாகியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா படம் வெளியானது. இந்த படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்த் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜினிகாந்த்தின் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்காகப் படத்தில் உள்ள சில பழைய காட்சிகள் நீக்கப்பட்டும் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டும் உள்ளது. இதற்கான இசை மற்றும் டப்பிங் பணிகள் சில தினங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

தற்போது பாபா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பழைய காட்சிகளோடு புதிதாகச் சேர்க்கப்பட்ட பின்னணி இசையோடு வெளியாகியிருக்கிறது பாபா டிரெய்லர். படத்தில் ஏதாவது புதிது இருக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

மோனிஷா

கிரிவலத்தை 1.52 மணி நேரத்தில் சுற்றி வந்த டிஜிபி!

தமிழகத்தில் வெளியாகுமா நயன்தாராவின் ‘கோல்டு’ ?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.