நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170. இந்த படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திக்கா சிங், துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பு தளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டையன் படத்தின் புது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் நிறைய வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ரஜினி கருப்பு கண்ணாடி அணிந்தபடி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படமும், கையில் துப்பாக்கி ஏந்திய படி மாஸாக போஸ் கொடுக்கும் மற்றொரு புகைப்படமும் இடம்பெற்றிருக்கின்றன.
ரஜினியின் வேட்டையன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
ஆளுநர் முதல் அண்ணாமலை வரை: அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்து!