குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் 80’s பில்டப்.
“80’s பில்டப்” படத்தின் போஸ்டர்கள் மற்றும் புரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்
இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனிஷ்கந்த், ப்ரீத்தி ராதிகா, மொட்ட ராஜேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சந்தானம் கமல் ரசிகராக நடித்துள்ளார். ரஜினி ரசிகராக இருக்கும் சந்தானத்தின் தாத்தா இறந்து போக கமலின் புது படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க முடியாமல் தவிக்கிறார் சந்தானம். கலகலப்பான வசனங்கள், காதல், ஆவி என பேன்டசி டிராமா கதைகளத்தில் உருவாகியுள்ளது 80’s பில்டப் திரைப்படம்.
இந்த படம் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இந்தி பெல்ட்டில் திடீர் அட்டாக்: கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மோடி துடிப்பது ஏன்?
ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரம் :கொந்தளித்த ரஞ்சித்