திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 15) சாமி தரிசனம் செய்தார்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தனது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவர் ஊரில் இல்லை என்று போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களிடம் ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டு திருப்பதி சென்றார் ரஜினி. அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சென்றிருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு அவரை அழைத்து சென்றனர்.
தொடர்ந்து இன்று காலை இருவரும் திருப்பதியில் சிறப்புத் தரிசனம் செய்தனர். அப்போது திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ரஜினிக்குத் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
இதன்பின் வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்தேன். 6 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. சாமியை தரிசிக்க வந்த இடத்தில் வேறு எதையும் பேச விரும்பவில்லை ” என்றார்.
பிரியா
அதிகாலை பயங்கர தீ விபத்து: மள மளவென எரிந்த கார்கள்!
டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு காரணம்!