நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தலைவர் 170.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பகத் பாசில், மலையாள நடிகை மஞ்சு வாரியர் என பல பிரபல நடிகர்கள் தலைவர் 170 படத்தில் நடித்து வருகின்றனர்.
தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அங்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பட கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.
அதனைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் தலைவர் 170 படத்தின் படபிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் @rajinikanth ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.. pic.twitter.com/A6diCV0dbK
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 14, 2023
அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இவர்களது சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்பிற்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக பதிவிட்டிருக்கிறார்.
கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
”யாருக்கும் உத்தரவாதம் கிடையாது”: இஸ்ரேலை எச்சரித்த ஈரான்!
ENGvsAFG: மீண்டும் அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்?