free jailer tickets to disabled people

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த ரஜினி ரசிகர்கள்!

சினிமா

ஜெயிலர் திரைப்படத்தின் 50ஆவது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படத்தை இலவசமாக பார்க்கும் வகையில் டிக்கெட் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், வஸந்த் ரவி, மிர்ணா, ஜாபர், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்த இப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது.

ஜெயிலர் படத்தின் 50ஆவது நாள் விழாவை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள், அங்குள்ள ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கில் சுமார் 170-டிக்கெட்களை புக் செய்து அதனை மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திரைப்படம் தொடங்குவதற்கு முன் திடீரென ஜெயிலர் பட ரஜினிகாந்த் போல் வேடமணிந்து திரையரங்கிற்குள் வந்த ரஜினி ரசிகர் ஒருவர் அங்கிருந்த மாற்றுதிறனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் போல் ஸ்டைலாக செய்கை செய்து ரஜினிகாந்த் போல் அங்கும் இங்கும் நடந்து சென்று திரையரங்குகளில் இருந்த மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மாற்றுதிறனாளிகளுக்கு திரையிடப்பட்டது.

இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: புதிய கூட்டணியின் பெயர் என்ன?  எடப்பாடியின் மாஸ்டர் பிளான்! 

’பாக்சிங்… ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *