தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். ஆனால், சமீப காலமாக ரஜினி படங்களை விட விஜய் படங்கள் அதிக வசூல் செய்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வருகிறார். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ரஜினி ரசிகர்களிடையே மோதி வருகின்றனர். rajini expllnation about his fans
விஜய்யை பற்றி அவதூறு கருத்துகளை ரஜினி ரசிகர்களும், ரஜினியை பற்றிய அவதூறு கதைகளை விஜய் ரசிகர்களும் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சண்டை தற்போது அடுத்த கட்டத்திற்கு மாறி உள்ளது. ட்விட்டர் ஸ்பேசில் ரஜினி ரசிகர்கள் சிலர், விஜய் பொதுமக்களை சந்திக்க வரும்போது அழுகிய முட்டைகளை அடிப்போம் என்று பேசி உள்ளனர். அதுவும் , நாமக்கல்லில் இருந்து குறைந்த விலைக்கு அழுகிய முட்டைகளை வாங்கி அடிக்க போவதாகவும் பேசியுள்ளனர். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் , ரஜினியின் உத்தரவின் பேரில் அவரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரஜினிகாந்தின் ரசிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் இப்படி பேசியது கண்டிக்கத்தக்கது. ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
ரஜினியின் உண்மையான ரசிகர்கள் யாரும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள். அனைத்து ரசிகர்களும் பரஸ்பரம் மரியாதை மற்றும் கண்ணியத்தை காக்க வேண்டும். திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். பிரிப்பதற்காக இருக்க கூடாது. ரசிகர்கள் உணர்வு என்ற பெயரில் எந்த மனிதருக்கும் எதிராகவோ சக நடிகர் மீதோ வெறுப்பை பரப்ப கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.