rajini dhanush movie competeting in 2024

2024-ல் நேருக்கு நேர் மோதும் ரஜினி – தனுஷ் படங்கள்?

சினிமா

2024 ஆம் கோடை விடுமுறைக்கு ரஜினி மற்றும் தனுஷ் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷின் ‘D 50’ படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிந்து விட்டது. D 50 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் அவர்களே இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். பா.பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. D 50 படத்திற்கு ‘ராயன்’ என்று டைட்டில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள படம் தலைவர் 170. இந்த படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினியின் வேட்டையன் மற்றும் தனுஷின் D50 ஆகிய இரண்டு படங்களும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் D50 ஏப்ரல் 11ஆம் தேதியும் ரஜினியின் வேட்டையன் ஏப்ரல் 12 ஆம் தேதியும் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி, தனுஷ் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய அளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் ரஜினியின் தர்பார் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மோதியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா ஆகிய படங்களின் ரிலீஸும் ஏப்ரல் மாதத்திற்கு தான் திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் கோடை விடுமுறைக்கு அனைத்து தியேட்டர்களும் திருவிழா போல கோலாகலமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *