ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் படம் தலைவர் 170. இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திக்கா சிங், துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப்பச்சனும் இணைந்து தலைவர் 170 படத்தில் நடித்துள்ளனர். மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி (நாளை) நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டிலுடன் ஸ்பெஷல் டீசர் மாலை 5மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
வெள்ள நிவாரணம் : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது?: அமைச்சர் பேட்டி!