ரஜினி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு: என்ன தெரியுமா?

சினிமா

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ந்து படக்குழு புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

நாளை (செப்டம்பர் 6 ) நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகவும் இவர்களின் முன்னிலையில் இதன் வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்பதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறதாம். அந்த விழாவில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளாராம் ரஜினி. பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தான் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள தலைவர் 170 படத்தையும் தயாரிக்க உள்ளதாம்.

இந்த படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற டான் படத்தை இயக்கியவர் ஆவார். இதற்கான அறிவிப்பை நாளை (செப்டம்பர் 6 )விழா மேடையில் ரஜினி அறிவிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
2
+1
4
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.