ராஜமவுலிக்கு அமெரிக்க விருது!

சினிமா

சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருது (New York Film Critics Circle) ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் ராஜமவுலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் 12 ஆயிரம் கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்த திரைப்படம் ஜப்பான் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதற்காகப் படக்குழுவினர் கடந்த மாதம் ஜப்பான் சென்றிருந்தனர்.

இந்நிலையில் சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் விருது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் ராஜமவுலிக்கு நேற்று (டிசம்பர் 2) வழங்கப்பட்டது.

rajamouli wins best director award in new york film critis circle

ராஜமவுலியின் இந்த வெற்றி சக போட்டியாளர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், டாரன் அரோனோஃப்ஸ்கி, சாரா பாலி மற்றும் ஜினா பிரின்ஸ்-பைத்வுட் ஆகியோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ராஜமவுலிக்கு விருது கிடைத்ததை ஆர்.ஆர்.ஆர் படக்குழு கொண்டாடி வருவதோடு நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருது ஜூரிக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

ஆர்.ஆர்.ஆர் படத்தை ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்க இயக்குநர் ராஜமவுலி முயன்று வந்த நிலையில் அவரது முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் அவர் தனிப்பட்ட முயற்சி மூலமாக சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஆஸ்கர் விருதில் பங்கேற்க நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!

வெற்றி மாறன் ஷூட்டிங்கில் விபத்து: சண்டைப் பயிற்சியாளர் மரணம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *