Raghava Lawrence pleads for Vijayakanth family

விஜயகாந்த் குடும்பத்திற்காக ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

சினிமா

Raghava Lawrence pleads for Vijayakanth family

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று பிரபல நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜனவர் 10) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

“நானும் எனது தாயாரும் மறைந்த நடிகர், தே.மு.தி.க தலைவர், புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த 8ஆம் தேதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

அதன்பின் கேப்டன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

அவர்களின் குடும்பத்தாரோடு உரையாடிய போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சொன்னார்கள்.

திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் சண்முக பாண்டியனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது.

விஜயகாந்த் சார் பல உதவிகளை செய்தவர். மற்ற ஹீரோக்களின் வளர்ச்சிக்காக பல படத்தில், கேமியோ பாத்திரத்தில் நடித்து உதவி செய்வார்.

அவர் நடித்த ‘கண்ணுபடப் போகுதையா’ படத்தில் ‘மூக்குத்தி முத்தழகு’ பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன், ரொம்பவும் அழகாக நடனமாடினார். எனக்கும் ரொம்ப ஊக்கம் ஊட்டினார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே களத்தில் இறங்கி அனைத்து விளம்பரப் பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப்படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்துகொள்வேன்.

திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள் யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள். சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை. அப்போது கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது.

அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். நன்றி” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கேப்டனின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராகவா லாரன்ஸின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: அமைச்சர் ரியாக்சன்!

இளையராஜா இசையில் ரஜினியின் “பேட்ட”!

Raghava Lawrence pleads for Vijayakanth family

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *