raghava lawrance got blessing from rajinikanth

ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராகவா லாரன்ஸ்

சினிமா

சந்திரமுகி 2  திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ்  ‘சந்திரமுகி’ படத்தின் நாயகன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’.

இதில் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் செப்டம்பர் 28 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும்  ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் முன் பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் நாயகனும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தன்குருவாக போற்றி வணங்கும்  ரஜினிகாந்தை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ‘சந்திரமுகி 2 படம் மாபெரும் வெற்றி பெறும்’ என  ரஜினிகாந்த் வாழ்த்தையும், ஆசியையும் ராகவா லாரன்ஸிற்கு வழங்கியிருக்கிறார்.

இராமானுஜம்

அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம்: ஜெகன்மூர்த்தி

விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *