மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா ஆகஸ்ட் 21ம் தேதி 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் , தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்று (ஆகஸ்ட் 21 ) தன்னுடைய 60 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்த நாள் விழாவில் நடிகை ராதிகா தன்னுடைய தோழிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ என்கிற படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய ராதிகாவின் பயணம் இன்று வரை வெற்றிகரமாக ஒடிக்கொண்டுதான் இருக்கிறது.
’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்தார்.
முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய ராதிகா, அடுத்தடுத்த படங்களில், மாடர்ன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், பாக்கியராஜ் போன்ற முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார் ராதிகா.
தற்போது இளம்கதாநாயகர்களின் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இதைத் தவிர மெகா சிரீயல் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றிகரமான சின்னத்திரை தயாரிப்பாளராகவும் தொடர்ந்து மிளிர்கிறார் ராதிகா.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 21 ) தன்னுடைய 60-வது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். தன்னுடைய நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளார்.
60 வயதிலும் நடிகை ராதிகா, தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியில் மாடர்ன் உடை அணிந்து, மிகவும் யங்-காக இருக்கிறார்.
இவரது இந்த பிறந்தநாள் பார்ட்டியில், ஜோதிகா, சினேகா , மீனா , வரலட்சுமி சரத்குமார் ,திவ்ய தர்ஷினி, அம்பிகா, ராதா, நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். நடிகை ராதிகாவிற்கு அவரது ரசிகர்கள் இணையதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கிச் சூடு: வெப் சீரிஸ் தயாரிக்கும் ராதிகா