ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியன் 2, தங்கலான், ராயன் படங்களின் ரிலீஸ் தேதி தெரிய வந்துள்ளது.
இந்த 2024-ம் ஆண்டு கோலிவுட்டிற்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. தமிழ் சினிமாவை பொறுத்தவரை இதுவரை அயலான், கேப்டன் மில்லர் என இரண்டு பெரிய படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன.
இதனால் தமிழக திரையரங்குகளை மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பேமிலி ஸ்டார் என பிறமொழி படங்களும் காட்ஸில்லா vs காங், குங்பூ பாண்டா போன்ற ஹாலிவுட் படங்களும் ஆக்கிரமித்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, தமிழில் பெரிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2, தங்கலான், ராயன் படங்களின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது.
அதன்படி தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் அவரின் 5௦-வது படமான ராயன் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது.
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 வருகின்ற ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகிறது.
பா ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் கோலார் தங்கச்சுரங்கம் பின்னணியில் உருவாகி இருக்கும் தங்கலான் ஜூன் மாதத்தின் கடைசியில் வெளியாக இருக்கிறது.
இதில் தங்கலான் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலும், ராயன் கேங்ஸ்டர் பின்னணியிலும், இந்தியன் 2 ஊழலை ஒழிக்க போராடும் ஹீரோ என்ற அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட மூன்று படங்களையுமே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஒரே மாதத்தில் இப்படங்கள் வெளியாவதால், ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்தாக இப்படங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thalaivar 171: மாநகரம், கைதி கனெக்ட்… பாலிவுட்டின் பெரிய ஹீரோவை களமிறக்கும் லோகேஷ்
“தமிழகத்தின் வளர்ச்சிக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு”: ஸ்மிருதி இரானி
தஞ்சை பெரியகோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பெருவிழா!