மயில்சாமியின் மகன்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவரின் பணியைத் தொடர வேண்டும்: பார்த்திபன்

சினிமா

மயில்சாமியின் மகன்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவரின் பணியைத் தொடர வைக்க வேண்டும் என்றும் நல்லது செய்வதை நான் மட்டும் செய்தால் பத்தாது நீங்களும் செய்ய வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று (பிப்ரவரி 19 ) உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மயில்சாமியுடனான நினைவுகள் குறித்து நடிகர் பார்த்திபன் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “நண்பர் மயில்சாமி நேற்று இருந்தார் ஆனால் இன்று இல்லை. சில நேரங்களில் சிலரின் மரணம் மிகவும் வலியை ஏற்படுத்துகிறது.

யாருக்காக மனது கலங்குகிறது என்றால் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே அவ்வாறு இருக்கும். அதை அடைவதென்பது சாதாரண காரியம் இல்லை.

நான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றியவர்கள் தான். பணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைபவர்கள் .

என் தோட்டத்தில் வேலை செய்த ஒருவருக்கு நான் நல்லது தான் செய்தேன். ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய கெடுதலை செய்தார்.

என்னுடைய அலுவலகத்தில் நான் சந்திக்கிற எல்லோரும் எனக்கு துரோகம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு நியாயம் இருக்கலாம். அப்படிபட்டவர்களுக்கு நடுவில் ஒருவர் மனிதராகவே வாழ்வது என்பது மிகவும் சிரமமான ஒன்று .

57 வயது தான் ஆகிறது மயில்சாமிக்கு ஆனால் நூறு வயதிற்கான வாழ்க்கையை அவர் வாழ்ந்துள்ளார். தன்னை உற்சாகமாக வைத்து கொள்வதற்காக சில நல்ல பழக்க வழக்கங்களை அவர் பின்பன்றினார்.

மயில்சாமிக்கு வழிகாட்டியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரிடம் கற்றுக்கொண்ட விசயங்களை வைத்து கொண்டு மக்களுக்கு தேடி தேடி உதவி செய்தவர்.

வசதியினால் மட்டுமே ஒருவன் உதவி செய்ய முடியும் என்பதை உடைத்து வசதியை ஏற்படுத்திக் கொண்டு உதவி செய்தவர் மயில்சாமி என்று கூறியுள்ளார்.

R Parthiban about Mayilsamy

மேலும், மயில்சாமி எப்படிபட்டவர் என்று விவேக் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருப்பார். அந்த வீடியோவை பார்த்து நான் கண் கலங்கினேன்.

காங்கேயம் காளை என்ற என்னுடைய படத்தில் ஒரு புது முக நடிகராக, உதவி இயக்குநராக என்னுடன் வந்து சேர்ந்தவர். ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது. இல்லை என்றால் அப்போதே அவர் பெரிய ஸ்டாராக உயர்ந்திருப்பார்.

மயில்சாமி ஒரு பெரிய சிவ பக்தர். அவருடைய இரண்டு மகன்களுக்கும் என்னுடைய அடுத்தடுத்த படங்களிலும் முக்கிய வேடங்களை கொடுத்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து மயில்சாமியின் பணியை தொடர வைக்க வேண்டும். நல்லது செய்வதை நான் மட்டும் செய்தால் பத்தாது, இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருப்பவர்களும் செய்ய வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திமுக அரசை கண்டித்து அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம்!

நாங்கள் பெரியாரின் பேரன்: பிரச்சாரத்தில் கமல்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *