தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி இன்று (ஏப்ரல் 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி). இந்த அமைப்பில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் நிறைவடைந்த நிலையில், 2023-26-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வடபழனியில் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. அதன்படி தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு மோகன மகேந்திரன், சபரிகிரிசன், தினா, மாரி, தவசிராஜ் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜ ரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் 2023-2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி தவிர வேறு யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனால் அவரே பெப்சி-யின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கலாஷேத்ரா ஹரிபத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி!
பாஜகவிற்கு பயப்பட மாட்டேன்: ராகுல் ஆவேசம்!