தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா.
பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் நண்பராக கேசவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி.
இவர் துணைநடிகையாக பணியாற்றி வந்த ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அந்த பெண் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது ஜெகதீஷை பஞ்சகுட்டா போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சகுட்டா காவல் நிலைய ஆய்வாளர் பி. துர்கா ராவ் கூறுகையில், “30 வயதான ஜெகதீஷ் பிரதாப் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார்.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பஞ்சகுட்டா காவல்நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை புகாரளித்தார். அதில், ’ஜெகதீஷ் தனது மகளை பிளாக்மெயில் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். அதனால் தான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஜெகதீஷை விசாரித்து அவரை கைது செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெகதீஷ் செல்போனில் அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ஜெகதீஷ் மீது ஐபிசி பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் பதிவு செய்து நேற்று கைது செய்துள்ளோம்” என்று துர்கா ராவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டிஸ்சார்ஜ் ஆன செந்தில்பாலாஜி… புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!
ICC தரவரிசை: ரஷீத் கானை வீழ்த்தி புதிய சாதனை படைத்த ரவி பிஸ்னோய்