இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து உருவாகியுள்ள ‘புஷ்பா – 2’ திரைப்படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான ‘கிஸ்ஸிக்’ வருகிற நவ.24ஆம் தேதி மாலை 7:02 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் பாடலில் சமீபத்திய வைரல் ‘ஸ்ரீலீலா’ ஆடவுள்ளார். இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் பாடல் ரிலீஸ் அறிவிப்பு குறித்த பதிவில், ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜூன் & ’டான்சிங் குயின்’ ஸ்ரீலீலா ஆட்டத்தில் களம் தீப்பிடிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் – நடிகை ஸ்ரீலீலா திரையில் சேர்ந்து வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘புஷ்பா – 2’ படத்தின் டிரெய்லர் கடந்த நவ.17ஆம் தேதி பாட்னாவில் பிரம்மாண்டமான வெளியீட்டு விழாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை யூடியூபில் சுமார் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபஹத் ஃபாசில், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்செயா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிரொஸ்லாவ் குபா ப்ரொசெக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நவீன் நூலி படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….