‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளநிலையில், புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி சுமார் 400 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா தி ரைஸ்.
அதனை தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியானது.
இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவு பெறாததால், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது.
அதன்படி, இப்படம் வெளியாக ‘இன்னும் 75 நாட்கள்’ எனக் குறிப்பிட்டுள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் புஷ்பா படம் வெளியான டிசம்பர் மாதத்தை இரண்டாம் பாக வெளியீட்டிற்கும் தேர்வு செய்துள்ளது படக்குழு என்பதுடன், வெளியீட்டு தேதியை மறுபடியும் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நண்டு பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!
ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளில் எத்தனை முறை டீ, காபி குடிக்கலாம்?
டாப் 10 நியூஸ்: சித்தராமையா வழக்கில் தீர்ப்பு முதல் அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு