புஷ்பா 2 – டீசர் எப்படி?

Published On:

| By Kavi

தெலுங்கு திரைப்படங்களில் நடிகர் பாலகிருஷ்ணாவை மிஞ்ச ஹீரோக்கள் இல்லை என்றே கூறலாம். கண்பார்வை, விரல் அசைவு, உடல் அசைவுகளில் எதிரிகளை துவம்சம் செய்வது, ஓட விடுவதில் அவருக்கே டப் கொடுக்கும் விதமாக நேற்று (ஏப்ரல் 6) வெளியான ’ருத்ரன்’ படத்தின் ட்ரைலர் இருந்தது. 

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்துள்ள ’ருத்ரன்’ படத்தின் ட்ரைலரில், குண்டர்களை காற்றில் பறக்க வைத்திருப்பார் லாரன்ஸ். வசனங்களும் அதுபோன்றே இடம்பெற்றது.

அதற்கு ஒரு சான்றுதான் ட்ரைலர் இறுதியில் வரும் ‘அந்த பூமிய படைச்ச சாமிடா நான்’ என்கிற பஞ்ச் டயலாக். அதற்கு எந்த வகையிலும் குறையில்லாமல் புஷ்பா – 2 படத்தின் முன்னோட்ட வீடியோ இன்று(ஏப்ரல் 7) வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் 2021ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா’.

சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின.

தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது.

இதன் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா: தி ரூல்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக தற்போது அல்லு அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி முழுவீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Pushpa 2 The Rule

வீடியோ என்ன சொல்கிறது

புஷ்பா’ கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது அதனையொட்டி புஷ்பா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

காவல் துறையினர், அரசியல்வாதிகள் தரப்பில் புஷ்பா கொல்லப்படவேண்டியவர்  என கருத்து எழ, மக்கள் தரப்பில் வழக்கமான நல்லவர் பிம்பம் புஷ்பா மீது கட்டமைக்கும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது

புஷ்பா செம்மரத்த கடத்தி சம்பாதிச்சாருன்னு சொன்னாங்களே அந்த பணத்த என்னா பண்ணாரு” என டீக்கடைக்காரர் பேசுகையில், வீரப்பன்கதை எட்டிப் பார்க்கிறது.

அடுத்து ‘என் புள்ள ஆப்ரேஷனுக்கு புஷ்பா தான் ஹெல்ப் பண்ணாரு’ என ஒரு பெண் சொல்கிறபோது நாயகன், சிவாஜி படங்கள் நினைவுக்கு வருகிறது

‘புஷ்பா தி ரூல்’ என்பது அல்லு அர்ஜூனை நல்லவராக காட்டும் அடுத்த பாகம் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. இறுதியில் ’ “காட்டு விலங்கு எல்லாம் ரெண்டு அடி பின்னால வச்சா, புலி வந்துருச்சுனு அர்த்தம், ஆனா அந்தப் புலியே ரெண்டு அடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்” என்ற வசனத்துடன்  அல்லு அர்ஜூனின் அறிமுகம் இடம்பெறுகிறது.

இராமானுஜம்

கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவோம்: பன்னீர் உறுதி

ஆளுநர் மாளிகை முன்பு திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

மாபெரும் மக்கள் மாநாடு: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர் சர்ச்சைகளும்!