சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’. பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகி ரூபாய் 35௦ கோடிக்கு மேல் வசூல் செய்தது.
இந்த படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் போன்ற நட்சத்திரங்கள் பணியாற்றி இருந்தனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் காம்போ மீண்டும் இணைந்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று படத்தின் டீசர் வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் புஷ்பா 2 பந்தயம் அடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படம் குறித்த மரண மாஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 275 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளது.
இது மட்டுமின்றி ஹிந்தி தியேட்டர் உரிமை ரூபாய் 200 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதுவரை எந்த படத்திற்குமே இவ்வளவு பெரிய தொகை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஜவான் படத்தின் ஹிந்தி தியேட்டர் உரிமை கூட, ரூபாய் 150 கோடிக்கு தான் விற்பனையானது.
ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே டப்பிங் திரைப்படமான புஷ்பா இந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமையில் மட்டுமே, சுமார் 475 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தேர்தல் முறைகேடு… 2 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது” : உச்சநீதிமன்றம்